close
Choose your channels

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்

Monday, April 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து முடித்துள்ள 'அயோக்யா' திரைப்படம் ஏற்கனவே ஒருசில ரிலீஸ் தேதிகளை அறிவித்திருந்தபோதிலும் ஒருசில காரணங்களால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

'அயோக்யா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று இரவு 7 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இன்று இரவு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் தொடங்கப்படும் என தெரிகிறது.

விஷால் தற்போது துருக்கியில் சுந்தர் சி இயக்கும் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அவர் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்ததும் 'அயோக்யா' படத்தின் புரமோஷன் பணியில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்மோகன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் விஷ்ணு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.