close
Choose your channels

விஷாலின் 'அயோக்யா' டிரைலர் ரிலீஸ் தேதி!

Monday, February 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்தின் டிரைலர் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருப்பதாகவும், இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'டெம்பர்' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கட்மோகன் இயக்கி வருகிறார்.

விஷால், ராஷிகண்ணா, கேஎஸ் ராவிகுமார் , சச்சு, வம்சி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். கார்த்திக் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில், மூர்த்தி கலை இயக்கத்தில், ராம்-லட்சுமண் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.