close
Choose your channels

விஷாலின் 'மார்க் ஆண்டனி': படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதியும் உடனே அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் எஸ்ஜே சூர்யா சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றும் நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.