close
Choose your channels

கோகுல் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோ இல்லையா? மாஸ் நடிகரிடம் பேச்சுவார்த்தை..!

Tuesday, January 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ‘காஷ்மோரா’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கும் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி விஷ்ணு விஷால் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றும் இந்த படத்தில் அவருக்கு நெகட்டிவ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் தான் பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் கதை நிஜத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய திருட்டு சம்பவத்தின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் இது ஒரு டார்க் காமெடி மற்றும் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக இருக்கும் என்றும் குறிப்பாக இந்த படத்தின் இன்டர்வல் பிளாக் இதுவரை இல்லாத அளவில் மிரட்டலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் மூன்று மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் எட்டு நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடைபெறும் என்றும் அது மட்டுமின்றி இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.