close
Choose your channels

'லால் சலாம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? விஷ்ணு விஷால் கொடுத்த மாஸ் தகவல்..!

Thursday, May 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’லால் சலாம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? விஷ்ணு விஷால் கொடுத்த மாஸ் தகவல்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை அருகே நடைபெற்றது என்பதும் இந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் நாயகனாக நடிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் இது குறித்த மாஸ் அப்டேட்டை தெரிவித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’லால் சலாம்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார் என்பதும் இந்த படம் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விக்ராந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இசை புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ரஜினிகாந்தின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் படத்தை முடித்தவுடன் அவர் ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.