close
Choose your channels

அஜித் ரசிகர்களின் எதிர்ப்பை மீறி ரிலீஸாகும் 'விஸ்வாசம்'

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது. பொங்கலுக்கு பின் சுமார் 20 படங்கள் வெளியான போதிலும் 'விஸ்வாசம்' படத்திற்கு இன்னும் நல்ல வசூல் கிடைத்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்; படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற அமேசான் நிறுவனம் இந்த படத்தை விரைவில் டிஜிட்டலில் வெளியிடவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது. இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிஜிட்டலில் மே மாதம் அஜித் பிறந்த நாளில் ரிலீஸ் செய்யலாம் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பிப்ரவரி 25ஆம் தேதி அமேசான் பிரைமில் 'விஸ்வாசம்' வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சத்யஜோதி நிறுவனமும் தனது சமூகவலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பிப்ரவரி 28ஆம் தேதி பல திரையரங்குகளில் 'விஸ்வாசம்' படத்தின் 50வது நாளை சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் 47வது நாளிலேயே டிஜிட்டலில் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.