நாளை முதல் விஸ்வாசம் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பல சாதனைகளை முறியடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் மட்டும் இருப்பதால் நாளை ஜனவரி 1 முதல் வரும் பத்து நாட்களிலும் 'விஸ்வாசம் கவுண்ட் டவுன் போஸ்டர்களை வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர். ஏ2 ஸ்டுடியோ டிசைன் செய்திருக்கும் இந்த படத்தின் புதிய அட்டகாசமான போஸ்டர்கள் கவுண்ட் டவுன் தேதிகளுடன் நாளை முதல் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே 'விஸ்வாசம்' திருவிழா அஜித் ரசிகர்களுக்கு ஆரம்பமாகிவிட்ட நிலையில் தற்போது கவுண்ட் டவுன் விருந்தும் தொடங்கவுள்ளதால் சமூக இணையதளங்களில் அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.