close
Choose your channels

கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர கார்.. வாங்கியவுடன் கதறியழுத அர்ச்சனா..!

Tuesday, April 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கி உள்ள நிலையில் அந்த காரை வாங்கி உடன் அவர் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே அர்ச்சனா என்பதும் சன் டிவியில் இளமை புதுமை, காமெடி டைம் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ஜி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா மீண்டும் தற்போது ஜி டிவியில் சில நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்

இந்த நிலையில் அர்ச்சனா ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள Mercedes-Benz GLC காரை வாங்கி உள்ளார். இந்த காரை வாங்க தனது குடும்பம் 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்ததாக அர்ச்சனா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. இந்த காரை வாங்கும் போது அவர் தனது மகள், தங்கை உள்பட குடும்பத்தினர் அனைவருடனும் கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.