close
Choose your channels

கஜா புயலின் உண்மையான பாதிப்பு என்ன? கமல்ஹாசன் கேள்வி

Wednesday, November 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் கஜா புயல் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களை சிதறடைத்து சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது.

இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள பாதிப்பு குறித்த முழு தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை என்றும், நிவாரண பணிகள் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் நடைபெற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், 'கஜா புயல் பாதிப்பு அரசின் புள்ளிவிவரங்களில் உள்ளதை விட அதிகம் என்றும், கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கஜா புயல் குறித்த உண்மையான பாதிப்பு விவரத்தை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.,

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.