close
Choose your channels

யோகிபாபுவுக்கு ஜோடியாகின்றாரா யாஷிகா?

Wednesday, December 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, தற்போது அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் கலக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் அவர் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 'தர்மபிரபு' திரைப்படம் வரும் 14ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல் வந்துள்ளது.

புவன் நல்லான் என்பவர் இயக்கவுள்ள பேண்டசி த்ரில் படத்தில் யோகிபாபுவும், அவருடன் பிக்பாஸ் புகழ் யாஷிகாவும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் யூடியூப் புகழ் கோபி சுதாகர், மனோபாலா, "கோலமாவு கோகிலா" அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், "மியூசிக்கலி" புகழ் சித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

''ஜாம்பி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்து இயக்குனர் புவன் கூறியபோது, 'இந்த படத்தின் நாயகன், நாயகி, வில்லன் எல்லாமே கதைதான். ஒரே இரவில் நடக்கும் த்ரில் காமெடி படம் இது' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.