close
Choose your channels

திருடுவதற்கு ஹார்டுவொர்க் எவ்வளவு முக்கியமோ, ஸ்மார்ட்வொர்க்கும் முக்கியம்: 'தூக்குதுரை' டிரைலர்..!

Wednesday, January 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த ‘தூக்குதுரை’ என்ற படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு கிராமத்தில் உள்ள கோவில் சிலையில் உள்ள கிரீடத்தை திருடுவதற்காக மொட்ட ராஜேந்திரன் குரூப் வருகின்றனர். ஏற்கனவே அந்த கிராமத்தில் உள்ள ஒரு குரூப்பும் அந்த கிரீடத்தை திருட முயற்சிக்கிறது. அந்த தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அந்த கிரீடத்தை யாராலும் திருட முடியாது என்றும் அந்த ஊரில் உள்ளவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.

இந்த நிலையில் தனது காதலியை தேடி யோகி பாபு அந்த கிராமத்துக்கு வருகிறார். அதன் பின் என்ன நடக்கிறது? கிரீடத்தை திருடர்கள் திருடினார்களா? யோகி பாபு காதலியை கைப்பிடித்தாரா? யோகி பாபுவுக்கும் அந்த கிரீடத்திற்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இந்த படத்தின் கதை அம்சம் அமைந்துள்ளது என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

யோகி பாபு, இனியா, மொட்ட ராஜேந்திரன், மகேஷ் சுப்பிரமணியன், சென்ராயன், பாலசரவணன், நமோ நாராயணன், கும்கி அஸ்வின், ஜி மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே யோகி பாபு நடித்த ’ட்ரிப்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் இசையில், ரவிவர்மா ஒளிப்பதிவில், தீபக் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி குடியரசு தின விருந்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.