close
Choose your channels

நல்லவனா இருந்தா கடைசி வரைக்கும் நல்லா இருக்க முடியாது: யோகிபாபுவின் 'லக்கிமேன்' டிரைலர்..!

Saturday, August 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு காமெடியனாக நடித்த பல திரைப்படங்கள் ஒரு பக்கம் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில், அவர் ஹீரோவாக நடிக்கும் சில படங்களும் அவ்வப்போது ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’லக்கி மேன்’. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த படத்தில் யோகி பாபு திடீரென பணக்காரராகி அதன்பின் ஏற்படும் பிரச்சனைகளை சந்திப்பது தான் கதை. ’நல்லவனாக இருந்தால் கடைசி வரை நல்லவனாக தான் இருக்க வேண்டும், நல்லா இருக்க முடியாது’ என்ற வசனத்தின் அடிப்படை தான் இந்த படத்தின் கதை என்பது தெரிய வருகிறது

யோகி பாபு, வீரா, ரெபாக்கா, ஆர்எஸ்வாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். வீரா இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சீன் ரோல்டன் இசையில், சந்தீப் விஜய் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.