close
Choose your channels

நடிகை பாவனா வாழ்வில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

Thursday, March 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பாவனா கடந்த மாதம் பாலியல் தொல்லைக்கு ஆளாகி அனைத்து தலைப்பு செய்திகளிலும் இடம்பிடித்த நிலையில் இன்று அவருடைய வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக அவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல கன்னட தயாரிப்பாளரும், பாவனா நடித்த 'ரோமியொ' என்ற கன்னட படத்தின் தயாரிப்பாளருமான நவீன் என்பவருக்கும், நடிகை பாவனாவுக்கும் இன்று காலை கொச்சியில் எளிமையாக நிச்சயதார்த்த நிகழச்சி நடந்ததாகவும், இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டார் தரப்பில் இருந்து 16 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை மஞ்சுவாரியர் மற்றும் நடிகர் சம்யுக்தாவர்மா ஆகியோர்களும் கலந்து கொண்டனர். பாவனா நிச்சய்தார்த்த புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது

பாவனாவுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த தகவலின்படி பாவனா-நவீன் திருமணம் இவ்வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெறும் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.