close
Choose your channels

இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனை சந்திக்கிறாரா ஓவியா?

Saturday, August 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மன அழுத்தத்தால் வெளியேற்றப்பட்ட ஓவியாவுக்கு தற்போது மனநல மருத்துவர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் கவுன்சிலிங் கொடுத்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மீண்டும் ஓவியா பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல மாட்டார் என்றே அவரது தரப்பினர் கூறி வருகின்றனர். இருப்பினும் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் ஓவியா சந்திக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. இந்த காட்சிகள் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் படமாக்கப்பட்டதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓவியா இல்லாத பிக்பாஸ், ஹீரோ இல்லாத திரைப்படம் போல் இருக்கும் என்றே அனைவரும் கருத்து கூறி வருகின்றனர். வெறும் வில்லன்களையும் காமெடி நடிகர்களையும் வைத்து எப்படி ஒரு திரைப்படத்தை ஓட்ட முடியும் என்பதுதான் தற்போதைய கேள்வி. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் எப்படியோ கமல்ஹாசன் நிகழ்ச்சியை பார்க்க வைத்துவிடுவார். மீதி ஐந்து நாட்கள் என்ன நடக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.