close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா'வில் இவர்தான் போலீஸ்

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஹூமா குரேஷி மற்றும் நானாபடேகர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்

'சிங்கம் ரிட்டர்ன்ஸ், 'தபாங் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் பங்கஜ் திரிபாதி தற்போது 'காலா'வில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். ஹீரோ ரஜினி டான் என்றால் போலீசாக நடிக்கும் பங்கஜ் அவருக்கு எதிரியாக நடிக்கின்றாரா என்ற கேள்விக்கு 'சிலசமயம் என்னுடைய போலீஸ் கேரக்டர் வில்லன் போல் ஆடியன்ஸ்களுக்கு தெரிந்தாலும், என்னுடைய கேரக்டர் நெகட்டிவ் கேரக்டர் அல்ல என்று கூறிய பங்கஜ், இந்த கேரக்டரை நிச்சயம் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தான் இதுவரை ரஜினியின் ஒரு படத்தை கூட முழுதாக பார்த்ததில்லை என்றும் 'ரோபோ' படத்தின் ஒருசில காட்சிகளை மட்டுமே பார்த்துள்ளதாக கூறிய பங்கஜ், இருப்பினும் அவரது எளிமை, திரைக்கு வெளியே நடிக்காமல் இருக்கும் அவரது குணம் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.