close
Choose your channels

இந்த வாரம் சமந்தா-எமிஜாக்சன் வாரம்

Monday, November 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகிய இருவருக்குமே இந்த வாரம் மறக்க முடியாத வாரமாக இருக்கும் என கருதப்படுகிறது. இரண்டு நடிகைகளும் நடித்த படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டிரைலர், இசைவெளியீடு என இந்த வாரத்தில் வெளியாகி அவர்களுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளது.


சமந்தா நடித்த '24' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 24ஆம் தேதியும், 'விஜய் 59' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வரும் 26ஆம் தேதியும், 'தங்கமகன்' படத்தின் பாடல் வெளியீடு வரும் 27ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

அதேபோல் எமிஜாக்சன் நடித்த 'விஜய் 59' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வரும் 26ஆம் தேதியும், 'தங்கமகன்' படத்தின் பாடல் வெளியீடு வரும் 27ஆம் தேதியும், அதே 27ஆம் தேதி 'கெத்து' படத்தின் டிரைலரும் வெளியாகவுள்ளது. இவற்றில் 'விஜய் 59' மற்றும் 'தங்கமகன்' படங்களில் இருவருமே நாயகிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.