close
Choose your channels

கருப்பு வெள்ளையில் நயன்தாராவின் அடுத்த படம்

Friday, March 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக இரு வேடங்களில் நடித்துள்ள 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கிவிட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சர்ஜூன் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் உள்பட ஒருசில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, 'பவானி, யமுனா என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். அதில் 'பவானி' கேரக்டரில் தான் கருப்பு நிற நயன்தாரா. இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா, முதலில் யோசித்ததாகவும், ஆனால் 3 மணி நேரம் மேக்க்ப் டெஸ்ட் எடுத்த பின்னரே அவருக்கு இந்த கேரக்டரில் நடிக்க நம்பிக்கை வந்ததாகவும் இயக்குனர் சர்ஜூன் கூறினார்.

மேலும் பவானி கேரக்டர் படத்தில் 25 நிமிடங்கள் வரும் வகையில் இருப்பதாகவும் இந்த 25 நிமிடமும் படம் கருப்பு வெள்ளையாக இருக்கும் என்றும் இயக்குனர் சர்ஜூன் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் கலையரசன், நயன்தாராவின் பவானி கேரக்டரின் கணவராக நடித்துள்ளதாகவும், அவருடைய கேரக்டர் படம் முழுவதும் டிராவல் செய்யும் வகையில் இருக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.