close
Choose your channels

நாளை முதல் ரஜினியுடன் மீண்டும் இணையும் எமிஜாக்சன்

Tuesday, October 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு ஒரே ஒரு பாடலை தவிர அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில் அந்த ஒரு பாடலின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது.

ரஜினிகாந்த், எமிஜாக்சன் கலந்து கொள்ளும் இந்த பாடலின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்கி ஒருசில நாட்களுக்கு நடைபெறும் என்றும், இந்த பாடலின் படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீடு துபாயில் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு மட்டும் லைகா நிறுவனம் ரூ.12 கோடி செலவு செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.