close
Choose your channels

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு சிறிய மாற்றம்.. 'லியோ' லேட்டஸ்ட் அப்டேட்..!

Friday, June 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அன்றைய தினம் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று செய்திகள் வெளியானது. இதனை அடுத்து அந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு பதிலாக ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் பாடிய பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த பாடல் தான் சிங்கிள் பாடல் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.