close
Choose your channels

அபிராமி வெங்கடாசலத்தின் பாம்பு டாட்டூ .. எந்த இடத்தில் குத்தியிருக்கிறார் தெரியுமா?

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் சமீபத்தில் முதுகில் நடராஜர் டாட்டூ குத்திருந்த புகைப்படத்தை பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான கண்டனங்களும் ஒரு சில ஆதரவுகளும் கிடைத்து வந்தன. இந்த நிலையில் தற்போது அவர் பாம்பு டாட்டூ குத்தி இருக்கும் இடம் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தனது உடம்பில் பாம்பு டாட்டூ குத்தி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் டாட்டூ குத்தும் இடமா இது? என்றும் டாட்டூ குத்தியவன் கொடுத்து வைத்தவன் என்றும் யாராவது டாட்டுவை மட்டுமே பார்த்தீர்களா? என்றும் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக அபிராமி, ‘வாழ்க்கையில் உயர்ந்த தரத்தை அமைத்ததற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்காதீர்கள், உங்களால் சகித்துக்கொள்ளக்கூடியது மற்றும் உங்கள் நரம்புகளில் எதைப் பெறுவது என்பது உங்களுக்குத் தெரியும்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை அபிராமி வெங்கடாஜலம் தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.