close
Choose your channels

அர்ஜுன் மகளை திருமணம் செய்கிறாரா குணசித்திர நடிகர் மகன்? குவியும் வாழ்த்துக்கள்..!

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜுன் மகளை பிரபல குணசித்திர நடிகர் மகன் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்சன் கிங் அர்ஜுனனுக்கு இரண்டு மகள்கள் உண்டு என்றும் அவர்கள் அஞ்சனா மற்றும் ஐஸ்வர்யா என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அர்ஜுன் மகள்களில் ஒருவர் ஐஸ்வர்யா, விஷால் நடித்த ’பட்டத்து யானை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அவர் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் தற்போது இன்னொரு திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும் அவரை திருமணம் செய்ய போகிறவர் பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.



‘அதாங்கப்பட்டது மகாஜனங்களே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான உமாபதி அதன் பின்னர் ’மணியார் குடும்பம்’ ’திருமணம்’ ’தண்ணி வண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் இந்த திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுவதால் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.