close
Choose your channels

நடிகர் கவின் திருமணம்.. மணமகளுடன் இருக்கும் புகைப்படம் வைரல்..!

Sunday, August 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கவின் திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் அவரது திருமணம் நடந்தது. திரையுலக மற்றும் சின்னத்திரையுலக பிரபலங்கள் அவரது திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்யப் போவதாகவும் இந்த திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கவின் - மோனிகா திருமணம் இன்று காலை நடைபெற்றதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கவின் - மோனிகா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவி புகழ், கவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் கவின் நடித்த ’டாடா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவானா மற்றும் திவ்யபாரதி நாயகிகளாக நடத்தி வருகின்றனர் என்றும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.