close
Choose your channels

'மைனா' விதார்த் திருமண ஆல்பம்.. யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரை உலக நடிகர்களில் ஒருவரான விதார்த்தின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் அவருடைய திருமணத்திற்கு கே எஸ் ரவிக்குமார், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகர் விதார்த் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். ஆரம்ப காலகட்டத்தில் சமையல் வேலை, கண்டக்டர் வேலை ஆகியவற்றை பார்த்து, அதன்பின் சினிமா ஆசையால் சென்னை வந்து கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றார். கௌதம் மேனனின் ’மின்னலே’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த விதார்த், அதனை அடுத்து பிரபுசாலமன் இயக்கிய ‘கொக்கி’, ‘லீ’ உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், ’மைனா’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. இந்த படத்தில் அவர் நாயகனாக நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தின் வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் நடித்த ’திருப்பதி’ படத்தில் ஒரு சிறு கேரக்டரிலும், ‘வீரம்’ படத்தில் அஜித்தின் சகோதரராகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விதார்த், காயத்ரி என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார் என்பது.

இந்த நிலையில் விதார்த் மற்றும் மனைவி காயத்ரி தேவியின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்திற்கு கே.எஸ்.ரவிகுமார், சரத்குமார், விவேக், தம்பி ராமையா, விமல், பசுபதி, ராதாரவி, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் வருகை தந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.