close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆக்கும் ஜெய் பட நாயகி

Wednesday, July 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3ஆம் பாகம் சமீபத்தில் ஆரம்பித்து சண்டை, சச்சரவு, ரொமான்ஸ் ஆகியவற்றுடன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி முதல் பிக்பாஸ் தெலுங்கு 3 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நாகார்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை ஒன்று சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் சிலரின் பெயர்கள் தெலுங்கு மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒருசிலர் இந்த தகவலை மறுத்துள்ளனர் என்பதும் ஒருசிலர் மறுப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு 3 நிகழ்ச்சியில் நடிகை ஹெபா பட்டேல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஜெய் நடித்த 'திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன்பின்னர் பல தெலுங்கு கன்னட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான '24 Kisses' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.