close
Choose your channels

அந்த கேமிராமேன் வேலை கொஞ்சம் கிடைக்குமா? ரைசா வில்சன் பீச் போட்டோஷூட்டிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்..!

Thursday, May 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரைசா வில்சனின் போட்டோஷூட் பீச்சில் நடைபெற்ற வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி இருக்கும் நிலையில் அந்த கேமராமேன் வேலை தங்களுக்கு கிடைக்குமா? என பலர் காமெடி கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஏராளமான கிளாமர் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அவர் பதிவு செய்யும் பிகினி புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தை ஸ்தம்பிக்க வைக்கும்.

இந்த நிலையில் நேற்று அவர் பீச்சில் பிகினி உடையுடன் ’2023 ஆம் ஆண்டின் சம்மர்’ என்ற கேப்ஷன் உடன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவான நிலையில் தற்போது இதே போட்டோசூட்டின் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

பீச் மணலில் படுத்து கொண்டு அவர் விதவிதமான போஸ் கொடுப்பதை அருகில் உள்ள கேமராமேன்கள் படம் எடுப்பது போன்ற காட்சி இந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் ’அந்த கேமராமேன் வேலை தங்களுக்கு கிடைக்குமா? குறைந்த பட்சம் அந்த அட்டை பிடிக்கும் வேலையாவது கிடைக்குமா? என்று பதிவு செய்து வருகின்றன. ஒரு சிலர் ‘நான் போற பீச்சுல எல்லாம், இந்த மாதிரி ஷூட்டிங் நடக்க மாட்டேங்குதே’ என்று ஆதங்கமாக கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.