close
Choose your channels

அட… நடிகை ரம்பா மாதிரியே இருக்காங்களே… மகள் புகைப்படத்தால் வியந்த ரசிகர்கள்

Monday, May 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

90 களில் வெளியான தென்னிந்திய சினிமாக்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரம்பா தன்னுடைய மூத்த மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, போஜ்பூரி என்று பல மொழி சினிமாக்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழ் சினிமாவில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார். துடிப்பான இவருடைய நடிப்பு மற்றும் அழகிற்காக ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்நிலையில் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை 2010 இல் திருமணம் செய்துகொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துவந்தார். தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பாவிற்கு லான்யா, சாஷா, ஷிவின் என்று 3 குழந்தைகள் உள்ள நிலையில் அவ்வபோது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் சமூகவலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது மூத்த மகள் லான்யாவின் புகைப்படத்தை நடிகை ரம்பா தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அச்சு அசலா நடிகை ரம்பா மாதிரியே இருக்காங்களே… நடிகை ரம்பாவின் பள்ளிப் புகைப்படம் என்றுதான் நினைத்தேன்… என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பங்கேற்று பரிசுக் கோப்பையுடன் இருக்கும் லான்யா இந்திரகுமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.