close
Choose your channels

நடிகை சங்கவியின் செல்ல மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் க்யூட் புகைப்படம்!

Saturday, January 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர்தான் நடிகை சங்கவி. தனது 16 வயதில் நடிகர் அஜித்துடன் இணைந்து “அமராவதி“ திரைப்படத்தில் நடித்து பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப்பல மொழிகளிலும் நடித்து தனி முத்திரைப் பதித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த இவரின் பாட்டி ஒரு பிரபல கன்னட நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிறிய வயதிலேயே பிரபல நடிகையாக வலம்வந்த இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து “விஷ்ணு“, “ரசிகன்“, “ரிஷி‘, “நிலாவே வா“ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் கமல், சத்யராஜ், சரத்குமார், ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து நல்ல பெயரைப் பெற்றிருந்தார்.

இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு “இந்திராணி“ எனும் திரைப்படத்தில் நடித்த இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிசியாகிவிட்டார். பின்னர் திருமணத்திற்கு பிறகு 2019 இல் “கொளஞ்சி“ எனும் குடும்பப் பாங்கான திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சங்கவிக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறார். அவருடன் தனது நேரத்தை செலவிட்டு வரும் நடிகை சங்கவி அவ்வபோது தனது குழந்தையின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பதிவிடப்பட்ட குட்டி சங்கவியின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.