close
Choose your channels

சினேகாவின் அம்மாவை பார்த்திருக்கிங்களா? வைரல் புகைப்படம்

Thursday, February 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடிகை சினேகாவின் மகள் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகின என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சினேகாவின் அம்மாவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஆத்யந்தா என்ற மகளும் விஹான் என்ற மகனும் உள்ளனர்.

சமீபத்தில் மகள் ஆத்யந்தா பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் சினேகா - பிரசன்னாவின் ரொமான்ஸ் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஆகியவை இணையதளத்தில் வைரலாகின.

இந்நிலையில் சினேகா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வரும் நிலையில், சினேகாவை விட அவரது அம்மா அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.