close
Choose your channels

ஐஸ்கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம்.. 'தெறி' நடிகையின் வைரல் வீடியோ..!

Monday, March 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ‘தெறி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஐஸ் கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமான ’காதலில் விழுந்தேன்’ என்ற படத்தில் நடித்தவர் நடிகை சுனைனா. பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘தெறி’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் சிறப்பு தோட்டத்தில் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா சமீபத்தில் ஐஸ்கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

ஐஸ் கட்டியை தொட்டாலே குளிரும் என்ற நிலையில் அதற்குள் உட்கார்ந்து எப்படி இவர் தியானம் செய்கிறார் என்று ரசிகர்கள் ஆச்சரியமாக இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.