close
Choose your channels

நடிகை டாப்ஸி நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம்.. டைட்டில் இதுதான்..!

Wednesday, July 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கிய ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’வந்தான் வென்றான்’ ’ஆரம்பம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து அவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்தார் என்பதும் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ’அனபெல் சேதுபதி’ என்ற தமிழ் படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்தார் என்பதும் இந்த படம் ஓடிடியில் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் டாப்ஸி நடித்து வருகிறார் என்று அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். எனது ’கேம்ஓவர்’ படத்தை ரசிப்பவர்களுக்கு இந்த படமும் பிடிக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏலியன் கேரக்டரில் தான் நடிக்கவில்லை என்றும் டாப்ஸி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நடிகை டாப்ஸி மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.