close
Choose your channels

அதிதி ஷங்கரின் அடுத்த படம்.. ஹீரோ, இயக்குனர் இந்த பிரபலங்களா?

Friday, March 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நிலையில் அதன் பின் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கும் அடுத்த படத்தில் தான் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகனாக அதர்வா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் ராஜேஷ் எம் தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் ’பிரதர்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் அதர்வா, அதிதி ஷங்கர் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் ’சிவா மனசுல சக்தி’ போல் ஒரு முழுக்க முழுக்க ரொமான்ஸ் காமெடி படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீ வாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.