close
Choose your channels

ஆதிக் ரவிச்சந்திரன் படம் இருக்கட்டும், அதற்கு அடுத்த அஜித் பட இயக்குனர் யார் தெரியுமா? மாஸ் தகவல்..!

Saturday, January 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை கூட அமைதியாக விளம்பரம் இன்றி நடந்ததாக கூறப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இரண்டு படங்களை அடுத்து அஜித் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. அவர்தான் ’கேஜிஎஃப்’ ’சலார்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் என்று கூறப்படுகிறது.

’விடாமுயற்சி’ படத்திற்கு முன்பே பிரசாந்த் நீல் அவர்களிடம் அஜித் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் ’கேஜிஎப் 2’ படத்தின் பணியில் அவர் பிசியாக இருப்பதால் தன்னால் முடியாது என்று கூறிவிட்டதாகவும் தற்போது இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருப்பதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித்தின் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் பிரசாந்த் நீல் படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.