close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் கூல் சுரேஷ் சந்தித்தது இந்த நடிகரைத்தான்: வைரல் புகைப்படம்..!

Wednesday, December 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஃபினாலேவுக்கு செல்ல போட்டியாளர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் முடிந்தவுடன் அடுத்த வாரம் முதல் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிறு அன்று வெளியே வந்த கூல் சுரேஷ் முதன்முதலாக பிரபல நடிகரை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுரேஷ் நடிகராக கடந்த 2001 ஆம் ஆண்டு அறிமுகமானார் என்றாலும் அதன் பிறகு அவர் சிம்பு மற்றும் சந்தானம் படங்களில் நடித்தார். இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளாக அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சந்தானத்தை பார்த்துள்ளார். சந்தானம் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இனி வரும் சந்தானம் படங்களில் கூல் சுரேஷ்க்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos