close
Choose your channels

கார்த்தியை அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாகும் அதிதிஷங்கர்? எந்த படத்தில் தெரியுமா?

Sunday, August 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமானார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ படத்திலும் நாயகியாக நடித்தார். தற்போது அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் தான் நாயகி என்று கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தில் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நாயகி நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி படத்தில் நடித்த அதிதி ஷங்கர் தற்போது சூர்யாவின் படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.