close
Choose your channels

ரஜினி, கமல், அஜித், விஜய்யை அடுத்து இன்னொரு பிரபலம்.. த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்பு..!

Saturday, September 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகிய நான்கு மாஸ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ’தலைவர் 171’ திரைப்படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும், அதே போல கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ’கமல்ஹாசன் 234’ படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யுடன் த்ரிஷா நடித்த ’லியோ’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான ’விடாமுயற்சி ’ படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி சல்மான் கான் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் த்ரிஷா நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ’லியோ’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் த்ரிஷா பரபரப்பாக பேசப்பட்டுள்ளதால் சல்மான் கான் படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

40 வயதில் த்ரிஷா இந்தியாவின் முன்னணி ஸ்டார்களுடன் இணைந்து நடிப்பது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.