close
Choose your channels

ரஜினி, சூர்யாவை அடுத்து தயாரிப்பாளர் விஏ துரைக்கு நிதியுதவி செய்த பிரபல நடிகர்..!

Wednesday, April 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் விஏ துரை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பிரபல நடிகர் ஒருவர் நிதி உதவி அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜயகாந்த் நடித்த ’கஜேந்திரா’ விக்ரம், சூர்யா நடிப்பில் பாலா இயக்கிய ’பிதாமகன்’ உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் விஏ துரை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ உட்பட பல படங்களுக்கு அவர் நிர்வாக தயாரிப்பு நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விஏ துரை, வறுமையின் காரணமாக சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது முழு மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி நடிகர் சூர்யா ரூ.2 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி, சூர்யாவை அடுத்து நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தயாரிப்பாளர் மூன்று லட்ச ரூபாய் விஏ துரையின் மருத்துவ செலவுக்காக நிதியுதவி அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.