close
Choose your channels

கட்டிப்பிடித்து முத்தம்.. 'நாட்டு நாட்டு' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராய்.. வீடியோ வைரல்..!

Monday, April 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகை தீபிகா படுகோனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழில் ’இருவர்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், அதன் பிறகு பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’இருவர்’ ’குரு’, ‘ராவணன்’, ஷங்கர் இயக்கத்தில் உருவான ’ஜீன்ஸ்’ ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஊமை கிழவி மற்றும் நந்தினி ஆகிய இரண்டு அற்புதமான கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே கையை பிடித்து இழுத்துச் சென்று ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு செம நடனம் ஆடினார். ஒரு கட்டத்தில் உற்சாகத்தில் அவர் தீபிகா படுகோனை கட்டிப்பிடித்துக் கொண்டு அவருக்கு முத்தம் கொடுத்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.