close
Choose your channels

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மியூசிக் வீடியோ: பாடிய பிரபலம் யார் தெரியுமா?

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வருகிறார் என்பதும் இந்த மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் முசாஃபிர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் மீடியாவின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்த டீஸரில் இந்த மியூசிக் வீடியோவில் பாடியவர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த மியூசிக் வீடியோவுக்கு அன்கித் திவாரி என்பவர் இசை அமைத்துள்ளதாகவும் பே பிலிம்ஸ் இந்த மியூசிக் வீடியோவை தயாரித்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த மியூசிக் வீடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளதாகவும் தமிழில் ராக்ஸ்டார் அனிருத், தெலுங்கில் சாகர் மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர்கள் பாடி உள்ளனர் என்றும் மியூசிக் வீடியோவின் டீஸரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மியூசிக் வீடியோ விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.