close
Choose your channels

அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? செம்ம ஹிட்டாக வாய்ப்பு..!

Thursday, March 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

அஜித் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

அஜித் திரைப்படங்களுக்கு அனிருத், ஜிவி பிரகாஷ், டி இமான், யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இசையமைத்து வரும் நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதால் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.