close
Choose your channels

உடற்பயிற்சி செய்யும் நடிகை அஞ்சலியிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்!

Sunday, March 7, 2021 • தமிழ் Comments

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் விரைவில் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை பிரதமர் முதல் முதல்வர் வரை அஜித் ரசிகர்கள் கேட்டு வந்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ‘வலிமை’ அப்டேட்டை யாரிடமும் கேட்க வேண்டாம் என்றும் சரியான நேரத்தில் ‘வலிமை’ அப்டேட்டை வெளியிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக பார்க்கும் பலரிடமும் ‘வலிமை’ அப்டேட்டை கேட்டு வருகின்றனர். சமீபத்தில் ’குக் வித் கோமாளி. ஷிவாங்கியிடம் கூட ‘வலிமை’ அப்டேட்டை அஜித் ரசிகர் ஒருவர் கேட்ட வீடியோ வைரல் ஆனது.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்யும் வகையில் இருக்கும் அந்த புகைப்படத்தில் அஜித் ரசிகர் ஒருவர் கமெண்ட்டில் ‘வலிமை’ அப்டேட்? என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz