close
Choose your channels

சென்னை அண்ணா சாலையில் 'அஜித் 61' படப்பிடிப்பு?

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள 61 வது படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அஜித் நடிக்க உள்ள ’அஜித் 61’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9ஆம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் என்றும் இதற்கான செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சென்னை அண்ணாசாலை போன்று ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு வருவதாகவும் இந்த செட் பார்ப்பதற்கே மிகவும் பிரமாண்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதிலிருந்து சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு குறித்து தான் இந்த படத்தின் கதை என்று கூறப்பட்டு வருகிறது.

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos