close
Choose your channels

மனைவி பரிசாக கொடுத்த பைக்கில் மாஸ் காட்டும் அஜித்.. வைரல் புகைப்படம்..!

Wednesday, May 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய மனைவி டுகாட்டி பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அந்த பைக்கில் ஸ்டைலாக அஜித் உக்காந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அஜித் தனது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடும் நிலையில் இந்த பிறந்த நாளையும் அவர் தனது மனைவி, மகன், மகள் ஆகியவர்களுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசாக டுகாட்டி பைக் ஒன்றை பரிசாக அளித்தார் என்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த பைக்கின் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அவை லைக்ஸ்களை குவித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் மனைவி பிறந்தநாள் பரிசாக கொடுத்த டுகாட்டி பைக்கில் அஜித் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை சற்றுமுன் ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் வெளியாகிய சில நிமிடங்களே ஆகி உள்ள நிலையில் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.