close
Choose your channels

'சற்றுமுன் 'துணிவு' படம் பார்த்தேன்': பிரபலத்தின் சமூக வலைத்தள பதிவு!

Monday, January 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சற்றுமுன் ‘துணிவு’ படத்தை பார்த்ததாக பிரபலம் ஒருவர் சமூக வளைதளத்தில் செய்த பதிவு வைரலாகி வருகிறது.

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் அதிகாலை 1 மணிக்கு முதல் காட்சி வெளியாக உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டுமின்றி இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனத்தின் மிக பிரம்மாண்டமான புரமோஷன் ரசிகர்களை மட்டுமின்றி படக்குழுவினர்களையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சற்றுமுன் அந்த படத்தை பார்த்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார். அவர் படத்தின் விமர்சனத்தை கூறவில்லை என்றாலும் அவர் பதிவு செய்த புகைப்படத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்க்கும்போது அவருக்கு படம் முழு திருப்தி என்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். ஜிப்ரான் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos