close
Choose your channels

இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ண போறதில்லை.. 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி' டீசர்..!

Sunday, April 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அனுஷ்கா நடித்து வரும் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ’சைலன்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா நடிக்கும் படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஒரு செஃப் ஆக நடித்து வருகிறார் என்பது குறித்து போஸ்டர்களும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த டீசரில் இருந்து இந்த படம் ஒரு காமெடி கலந்த ரொமான்ஸ் படம் என்பது தெரிய வருகிறது. அனுஷ்கா ஷெட்டி, நவீன் பொலிஷெட்டி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மகேஷ்பாபு இயக்கத்தில் ராதான் இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் அனுஷ்கா ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.