close
Choose your channels

ஆப்பிள் சிஇஓ டிம் குக் உடன் ரஜினிகாந்த் மகள்.. வைரல் புகைப்படங்கள்..!

Tuesday, April 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

உலகின் முன்னணி ஐபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை நிலையத்தை இந்தியாவில் இன்று தொடங்குகிறது. மும்பையில் இந்த விற்பனை நிலையம் இன்று தொடங்கப்பட உள்ளதை அடுத்து நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆப்பிள் சிஇஓ டிம் குக் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மேலும் இந்த விழாவிற்காக என்னை தயார்படுத்தி மேக்கப் செய்த ஸ்வேதாவுக்கு எனது நன்றி. ஆப்பிள் சிஇஓ டிம் குக் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏஆர் ரஹ்மான் அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் எனக்கு மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏஆர் ரகுமான், பாலிவுட் நடிகை நேஹா தூபியா ரவீனா டண்டன், மாதுரி தீட்சித் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இது குறித்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.