close
Choose your channels

பிரெய்ன் கீழே விழுந்துருச்சா... மாயா குரூப்பை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த அர்ச்சனா..!

Wednesday, November 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் கீழே இருந்து ஏதோ எடுப்பதை போல பூர்ணிமா செய்தார். அப்போது விசித்ரா ’இப்ப என்ன எடுத்த’ என்று கேட்கும் போது பிரெய்ன் என்று கூறி கிண்டல் செய்த பூர்ணிமாவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

‘இந்த பிரச்சனையை அப்படியே டைவர்ட் செய்து, ஒரு நல்ல ஸ்ட்ராங் போட்டியாளரை வெளியே தள்ளி விட்டுட்டார்கள்’ என்று விசித்ரா கூறியதற்கு தான் பூர்ணிமா பிரெய்னை கீழே இருந்து எடுப்பதை போல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ’ரெட் கார்டு வாங்கிட்டு போனவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை’ என்று கூறிய அர்ச்சனா விளக்கம் அளிக்க வந்த போது அப்போதும் பூர்ணிமா அர்ச்சனாவை கிண்டல் செய்யும் வகையில் ’நான் கேப்டன் சொன்னது கேட்க மாட்டேன், இப்படித்தான் செல்வேன்’ என்று கூறிய போது ’கேப்டன் ஒருதலை பட்சமாக இருக்கும் போது அப்படித்தான் செய்வாங்க’ என்று அர்ச்சனா பூர்ணிமாவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்தார்.

மாயா, பூர்ணிமா, ஜோவிகா தொடர்ந்து கிண்டல் செய்த போதிலும் அதை கண்டுகொள்ளாமல் அசால்டாக அர்ச்சனா சென்றது பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் மாயா கேங் விரைவில் வெளியேற போவது உறுதி என்பதையே இது காட்டுவதாக பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.