close
Choose your channels

ரிலீசுக்கு தயாரானது ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம்.. வைரல் புகைப்படங்கள்..!

Monday, September 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஜிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கொடூரமான முறையில் கொலை ஒன்று நடக்கும் நிலையில் அதை விசாரிக்கும் பின்னணி தான் இந்த படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பரத் ஆசீவகன் என்பவர் இசையமைக்கும் இந்த படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.