close
Choose your channels

ஆர்யாவுக்கு விடை கொடுத்து அனுப்பிய 'காப்பான்' படக்குழு!

Wednesday, February 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த 'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த சூர்யா, டப்பிங் பணியையும் தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த ஆர்யாவின் காட்சிகளுக்குரிய படப்பிடிப்பு இன்றுடன் முடிந்தது. இதனையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் ஆர்யாவை வழியனுப்பி வைத்தனர்.

சூர்யா, சாயிஷா, மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.