close
Choose your channels

63வது தேசிய விருதுகள் அறிவிப்பு. சிறந்த நடிகர், நடிகை யார்?

Monday, March 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

63வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே வெளிவந்த செய்திகளின்படி சற்று முன்னர் தேசிய விருது பெற்ற நட்சத்திரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி கடந்த 2015ஆம் ஆண்டின் சிறந்த நடிகராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 'பிக்கு' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதினை பெறுகிறார். அமிதாப்பச்சன் ஏற்கனவே அக்னிபத், பிளாக் மற்றும் 'பா' ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 'தானு வெட்ஸ் மானு 2' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கங்கனா ரனாவத் அவர்களுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இவரும் ஏற்கனவே ஃபேஷன், க்வீன் ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

மேலும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும், சிறந்த இயக்குனருக்கான விருது பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பஞ்சாலி அவர்களுக்கும் கிடைத்துள்ளது.

மற்ற பிரிவுகளுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் விபரங்களை இன்னும் ஒருசில நிமிடங்களில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.