close
Choose your channels

முதல்ல பிரதீப்பை எலிமினேட் செய்யுங்க சார்.. கமல்ஹாசனிடம் பவா செல்லத்துரை..!

Sunday, October 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று, முதல் எலிமினேஷன் நடைபெற இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வார நாமினேஷனில் ஏழு பேர் சிக்கி உள்ளதை அடுத்து அந்த ஏழு பேரில் ஒருவர் இன்று வெளியேறப் போகிறார். சமூக வலைதளங்களில் வந்த தகவலின்படி அனன்யா ராவ் இந்த வாரம் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யாராக இருக்கும் என்று கமல்ஹாசன் கருத்து கேட்கிறார். அப்போது பவா செல்லதுரை, ‘பிரதீப் ஆகத்தான் இருக்கும் என்று கூறுகிறார். ஆனால் ஒரு சிலர் பவா செல்லத்துரையாக இருக்கும் என்று கூறுகின்றனர். இதற்கு பவா செல்லதுரை பதில் கூறியபோது ’நான் இன்னும் கொஞ்ச நாள் கழித்து தான் எலிமினேஷன் செய்யப்படுவேன் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

முன்னதாக கமல்ஹாசன் முதல் வாரம் எவிக்‌ஷனே கிடையாது என்று கூறும்போது, பிரதீப் கைதட்டுகிறார், அவசரப்படாதீர்கள் பிரதீப், இரண்டு வீடு இருப்பதால் ரெண்டு எலிமினேஷன் இருக்குமோ, திக் திக் என்று இருக்கிறது என்று கூறுகிறார்.

மொத்தத்தில் இன்று எலிமினேஷன் உண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் எலிமினேஷன் செய்யப்படுவது யார் என்பதை இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.